வணக்கம்

18. July 2010

 

எல்லோருக்கும் வணக்கம்.

தமிழில் ப்ளாக் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. ஆனால் இதுவரை ஒரு வாசகனாக மட்டுமே இருந்திருக்கிறேன். நிறைய முறை Blogger account open பண்ணினதோட சரி, அதற்கு பிறகு ஒரு பதிவும் எழுதினது இல்ல. இப்போ தான் ஒருவழியா அதற்கு சரியான நேரம் அமைந்திருகிறது, இங்கேயாவது தொடர்ந்து எழுதனும்னு நினைக்கிறேன்.

இதுவரைக்கும் நான்  school college examஅ தவிர பெரியதாக ஒன்றும் எங்கயும் எழுதினது இல்ல, இதுதான் என்னுடைய முதல் எழுத்து முயற்சி. என்னுடைய எழுத்தில் எதாவது பிழையிருந்தால் அதை சுட்டிக்காட்டி சரி செய்ய உதவுங்கள். என்னுடைய எழுத்தில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் இருக்கும், முடிந்தவரை நான் ஆங்கில வார்த்தைகளை குறைத்து எழுதலாம் என்று இருக்கிறேன். அதேபோல், என்னுடைய எழுத்தில் உரைநடையும் பேச்சுநடையும் கலந்து இருக்கும், அதையும் போக போக சரி செய்யனும். எனக்கு தமிழ் keyboard உபயோகித்து எழுத தெரியாது. இப்போதைக்கு நான் கூகிள் உதவியுடன் தமிழில் எழுதுகிறேன்.

இங்கே நான் ஆங்கிலத்திலேயும் தமிழிலேயும் எழுதலாம் என்றிருக்கிறேன். என்னுடைய வேலை தொடர்பான டெக்னிகல் ப்ளாக்குகளை ஆங்கிலத்திலும் மற்றவற்றை தமிழிலும் எழுதவிருக்கிறேன். அதேபோல், எனக்கு எழுதுவதை விட படிப்பதற்கு கொஞ்சம் அதிகமாக நேரம் கிடைக்கும், அதனால, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது எனக்கு படித்ததில் பிடித்தவைகளையும் இங்கே பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன்.

என்னுடைய வலைப்பூவிற்கு வருகைபுரிந்ததற்கு நன்றி!.

 

General, Tamil, பொது ,